FLASH NEWS
ஈரோடு மொடக்குறிச்சியில் டாக்டர் கலைஞர் முழு திருவுருவ வெண்கல சிலை, கலைஞர் படிப்பகம், திமுக இளைஞரணி அன்பகம் உதயம் அலுவலகம் திறப்பு விழா - திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோடு பெருந்துறையில் பிரச்சாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சி 2 ஆவது மண்டல தலைவர் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச கண் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கிய அமைச்சர் சு.முத்துச்சாமி ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் சு.முத்துசாமி விருப்ப மனு அளித்தார்.

ஈரோடு மாணவர்கள் தேசிய கராத்தே போட்டியில் சாதனை

Posted on November 20, 2025 by Admin User
அரசியல்
ஈரோடு மாணவர்கள் தேசிய கராத்தே போட்டியில் சாதனை
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், 2025 நவம்பர் 15 முதல் 18 வரை நடைபெற்ற 1st சி.பி.எஸ்.சி கராத்தே நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஈரோடு மாணவர்கள் வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250-க்கும் அதிகமான பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த ஈரோடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதன்முறையாகப் பங்கேற்றுத் தங்கள் திறமையை நிரூபித்தனர்.
7-ஆம் வகுப்பு மாணவர் நிதீசன் வெள்ளிப் பதக்கமும் அதே வகுப்பைச் சேர்ந்த கபிலன் வெண்கலப் பதக்கமும் வென்று தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்தனர்.


இந்தச் சிறப்பான வெற்றி, ஈரோடு பப்ளிக் பள்ளி நிர்வாகத்திற்கும், கராத்தே விளையாட்டுக்கும் ஒரு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.


தேசிய அளவில் பதக்கம் வென்ற இந்த இளம் வீரர்கள் ஈரோடு திரும்பியபோது, ரயில் நிலையத்தில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிய நடுவரான கராத்தே பயிற்சியாளர் சுரேஷ் தலைமையில், பெற்றோர்கள், சக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து வீரர்களைப் பாராட்டினர். பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, வெற்றி பெற்ற மாணவர்களை மனதார வாழ்த்திப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts