FLASH NEWS
முழு நேர நியாயவிலைக்கடையின் புதிய கட்டிடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் சு.முத்துச்சாமி வழங்கினார் ஈரோட்டில் வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டில் மன்னர் காலிங்கராயர் முழு திருவுருவ வெண்கலச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். வீரப்பன்சத்திரம் திமுக பகுதி கழகத்தின் சார்பாக சமத்துவ பொங்கல், கோல போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் -அமைச்சர் சு.முத்துசாமி பரிசு வழங்கி சிறப்பித்தார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தகவல்

2024-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளை சென்னையில் தமிழக முதல்வர் வழங்கினர்

Posted on November 20, 2025 by Admin User
அரசியல்
2024-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளை சென்னையில் தமிழக முதல்வர் வழங்கினர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.11.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 2024-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளை சென்னை, மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் தெ. ஞானசுந்தரம் (மரபுத் தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் இரா. காமராசு (ஆய்வுத் தமிழ்), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த க. சோமசுந்தரம் (எ) கலாப்ரியா (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந.அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!